உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நில ஆர்ஜித இழப்பீடு வழக்கில் தப்பிய அரசு விருந்தினர் மாளிகை

நில ஆர்ஜித இழப்பீடு வழக்கில் தப்பிய அரசு விருந்தினர் மாளிகை

கோவை: நில ஆர்ஜித இழப்பீடு தொகை தொடர்பாக, அரசு விருந்தினர் மாளிகையை ஏலமிட உத்தரவிடப்பட்ட அறிவிப்பு கைவிடப்பட்டது.கோவை, ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்,64. இவருக்கு சொந்தமான கணபதி பகுதியிலுள்ள நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், 1983ல் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு இழப்பீடு தொகை வழங்க தவறியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனால், 2004ல், 4.5 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், முழு தொகை செலுத்தாமல், 2.75 கோடி ரூபாய் பாக்கி வைத்தனர்.இதனால் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு கோர்ட்டில், பாலசுப்பிரமணியன் சார்பில், வக்கீல் அம்பிகா நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.விசாரித்த கோர்ட், கோவை ரெட்பீல்டிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையை( சர்க்யூட் ஹவுஸ்) ஜப்தி செய்து, ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, இழப்பீடு தொகை வழங்க கூடுதல் அவகாசம் கேட்டு, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையில், பாக்கி தொகையில், வரி பிடித்தம் போக, 1.97 கோடி ரூபாயை கோர்ட்டில் வீட்டு வசதி வாரியம் சார்பில் செலுத்தினர். இதனால், அரசு விருந்தினர் மாளிகையை ஏலமிட அறிவிக்கப்பட்ட உத்தரவு கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை