உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு திட்டங்கள் மக்களை சென்றடையணும்! ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை

அரசு திட்டங்கள் மக்களை சென்றடையணும்! ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை

வால்பாறை: அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என, ஆய்வுக்கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி., அறிவுறுத்தினார். வால்பாறை நகராட்சி கலையரங்கில், அரசு துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் குமரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்து பேசியதாவது: அரசின் திட்டங்களை மக்களை முழுமையாக சென்றடைய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, வனவிலங்கு -- மனித மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் சிரமத்தை உணர்ந்து சேவை மனப்பான்மையோடு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் செய்வதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வளர்ச்சிப்பணிகளும் விரைந்து செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார்.ஆய்வுக்கூட்டத்தில், தாசில்தார் அருள்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியம், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ரகசிய கூட்டம் வால்பாறை நகராட்சியில் தலைவர் - கவுன்சிலர்களிடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்த நிலையில், வளர்ச்சிப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் நகராட்சியில் எந்த வளர்ச்சிப்பணியும் நடைபெறாதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், ஆய்வுக்கூட்டம் முடிந்த பின் எம்.பி., தலைமையில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, வளர்ச்சிப்பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும், என, வலியுறுத்தியாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை