உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை; அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1989 - 90 எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்கள், 1990-92ல் பிளஸ் 2 படித்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள ரிசார்ட்டில் நடந்தது.தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், நாட்டிய நடன நிகழ்ச்சிகளும், உணவு விருந்தும் நடந்தது. 32 ஆண்டுகளுக்கு பின், சந்தித்து தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இவர்களில் பலர், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர், ஆசிரியர், ராணுவம், போலீஸ், கடல்சார் துறைஎன்று பல துறைகளில், வெவ்வேறு நாடுகளில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ