நீட் தேர்வில் அசத்தியஅரசு பள்ளி மாணவி
அன்னுார் : அன்னுாரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் அன்னுார் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி வித்ய ஸ்ரீ, நீட் தேர்வில் 720க்கு 519 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் அன்னுார் அருகே வடக்கலூரை சேர்ந்த தையல் தொழிலாளி புஷ்பராஜின் மகள்.அதிக மதிப்பெண் பெற்ற வித்ய ஸ்ரீக்கு, பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் அன்னுாரைச் சேர்ந்த அனுஷ் ஆதித்யா, கோவையில் தனியார் பள்ளியில் படித்து 'நீட்' தேர்வில் 720க்கு 572 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் அகில இந்திய அளவில் 1909வது இடம் பெற்றுள்ளார்.