வினாடி - வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் டாப்
கோவை; கோவையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில், வினாடி - வினா போட்டி நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீ விஷ்ணு, ரோகித் ஆகியோர் இறுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.