உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பள்ளி ஆசிரியர் தங்கம் வென்றார் 

 அரசு பள்ளி ஆசிரியர் தங்கம் வென்றார் 

ஒத்தக்கால்மண்டபம்: அகில இந்திய அரசு ஊழியர்களுக்கான தடகளப் போட்டியில் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில், டிச. 13 முதல் 15 வரை நடைபெற்ற இப்போட்டியில், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளை சேர்ந்த 2,500 ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 25 பேர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மோகன்குமார், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவரை முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ