மேலும் செய்திகள்
மார்ச் 29ல் கிராம சபை கூட்டம்
23-Mar-2025
அன்னுார்; உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 21 ஊராட்சிகளிலும், இன்று (29ம் தேதி) காலை 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் குடிநீர் தேவை, குடிநீர் துாய்மை, சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 'கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை பதிவேற்றம் செய்ய மொபைல் செயலி தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் கூட்ட நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.எனவே, அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊராட்சியில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று குடிநீர் விநியோகம் மற்றும் தேவை குறித்து தெரிவிக்கலாம்,' என வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதேபோல், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.
23-Mar-2025