உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை

ஊட்டி : நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கிராம பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியினர் கூலி வேலைக்கு சென்று விடுவது வழக்கம். தனியாக உள்ள குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில், நான்கு வயது சிறுமிக்கு தாத்தா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை தம்பதியர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, விபரம் தெரிய வந்ததை அடுத்து, கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 2023ம் ஆண்டு அக்., 18ல், அவரை கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி எம். செந்தில்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கிராம பகுதியை சேர்ந்த நிஷாந்த்,22. அப்பகுதியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, 2019ம் ஆண்டு ஆக., 18ம் தேதி நிஷாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நிஷாந்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை