உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமைவழிச் சாலை ஆட்சேபனை கூட்ட நேர விவரம்

பசுமைவழிச் சாலை ஆட்சேபனை கூட்ட நேர விவரம்

அன்னுார்; பசுமைவழிச் சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் நடைபெற உள்ள விசாரணை கூட்டத்திற்கான நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 1,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குரும்பபாளையம் முதல் அன்னுார் வழியாக, கர்நாடக எல்லை வரை, புதிதாக பசுமைவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தவர்களிடம் விசாரிக்கும் கூட்டம் கடந்த 14ம் தேதியும், 19ம் தேதியும் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.மூன்றாவது கட்ட கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நேர அட்டவணையை நில எடுப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 'இதன்படி நாளை (23ம் தேதி) காலை 10:30 மணிக்கு, ஆலத்தூர், பொங்கலூர் ஊராட்சி மக்களும், மதியம் 2:30 மணிக்கு, ஆம்போதி, பசூர், கணுவக்கரை ஊராட்சி மக்களும் பங்கேற்கலாம்.வருகிற 26ம் தேதி நடைபெறுகிற விசாரணையில், காலை 10 : 30 மணிக்கு கொண்டையம்பாளையம் ஊராட்சி மக்களும், மதியம் 2:30 மணிக்கு குப்பேபாளையம், காட்டம்பட்டி, கரியாம்பாளையம் ஊராட்சி மக்களும் பங்கேற்கலாம். இந்த நேர அட்டவணை பின்பற்றினால் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி