உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு அகப்பயிற்சி; ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

மாணவர்களுக்கு அகப்பயிற்சி; ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

கோவை; கோவை துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு அகப்பயிற்சி வழங்குவது குறித்து, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆ னைமலை, கோவை நகரம், காரமடை, கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி தெற்கு, சூலுார் மற்றும் தொண்டாமுத்துார் உள்ளிட்ட வட்டாரங்களில் செயல்படும், 17 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிற்கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் மூர்த்தி கூறுகையில், “ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, அடிப்படை இயந்திரப் பொ றியியல், அடிப்படை மின் பொறியியல், அலுவலக மேலாண்மை, வேளாண் அறிவியல், கணக்கியல் மற்றும் தணிக்கை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தொழில் பயிற்சி வழங்குவதற்காக, ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாணவருக்கான செலவு தொகையை ரூ.800ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை