மேலும் செய்திகள்
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ
20-Dec-2025
கோவை: முறையான லைசென்ஸ் இன்றி துப்பாக்கி வைத்திருந்த வங்கி செக்யூரிட்டி மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே, வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் செக்யூரிட்டியாக கேரள மாநிலம் பாலக்காடு, கல்லேகுளங்கராவை சேர்ந்த குமரேசன், 65 என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குமரேசனிடம் இருந்த துப்பாக்கியின் லைசென்ஸை பரிசோதித்தனர். அதில் சந்தேகம் ஏற்பட்டதால் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்தனர். குமரேசன் முறையான லைசென்ஸ் இன்றி துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Dec-2025