ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கோவை, ; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்து வருகின்றனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனராகசரவண சுந்தர் பொறுபேற்ற பிறகு, 76 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அனீஸ் ரகுமான், 22 மற்றும் பெரிய கடை வீதி பகுதியில், தொடர் குற்றச்செயல்கள் செய்து, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த, தெற்கு உக்கடத்தை சேர்ந்த அசாருதீன், 29 ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கோவை மநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்றுஉத்தரவிட்டார்.