உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது 

ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது 

பொள்ளாச்சி : கோவை உக்கடத்தில் ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.தற்போது ரேஷன் அரிசி கடத்தல் ஆங்காங்கே நடந்து வருகிறது. அவர்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அவ்வப்போது பிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்படுகிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 4ம் தேதி, கோவை சுங்கம், பைபாஸ் ரோடு அருகே பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மாருதி வேனில், 1,060 கிலோ ரேஷன் அரிசி கடத்திய, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிஹபீப்ரகுமான் என்பரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர், கடந்த பிப்., மாதம், உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் ரோட்டில், லாரி வாயிலாக, 2,200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்தது.அதன்பேரில், அபிஹபீப்ரகுமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் பரிந்துரைத்தார்.கோவை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே, கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ளவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை