மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
24-Jun-2025
கோவை; டவுன்ஹால் பகுதியில் நடந்த அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின் கூட்டத்தின் போது பிக் பாக்கெட் அடித்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி இரண்டு நாட்கள் கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, டவுன்ஹால், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் பேசினார்.நேற்று முன்தினம் இரவு, டவுன்ஹால் கோனியம்மன் கோவில் முன் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கூட்டத்திற்கு வந்த வெங்கடேஷ், 38 என்பவரின் பாக்கெட்டில் இருந்த 'பர்சை' பிக் பாக்கெட் அடித்து சென்றனர். அதில், ரூ.7000 பணம், மூன்று ஏ.டி.எம்., கார்டுகள், ஆதார் கார்டு, லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளது.சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிக் பாக்கெட் நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
24-Jun-2025