உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது

கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது

திவ்யா, ஆர்.எஸ்.புரம் கிழக்கு

40 ஆண்டுகளுக்கும் மேலாக கொலு வைத்து வருகிறோம். கொலு வைப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறது. முன்னோர் கொடுத்த பொம்மைகளை பல தலைமுறைகளாக பாதுகாப்பாக கொண்டு செல்வது நல்வழியை ஏற்படுத்தும். உமா, ஆர்.எஸ்.புரம் நவராத்திரி வந்து விட்டாலே, எங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி துவங்கி விடும். கொலு வைப்பதற்காக பார்த்து, பார்த்து அனைத்தையும் தயார் செய்வோம். 47 ஆண்டுகளாக கொலு வைத்து வருகிறேன்.

மாலினி, தடாகம் ரோடு

கொலு என்றாலே மன அமைதியை தரக்கூடியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜைகள் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கும்போது, ஆத்ம திருப்தி கிடைக்கும். 50 ஆண்டுக்கும் மேலான முருகன், வள்ளி, தெய்வானை பொம்மை வைத்துள்ளோம். பொன்னையராஜபுரம் பகுதியில் ரிதன்யா குடும்பத்தினர், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பல ஆண்டுகளான தொட்டில், கவனத்தை ஈர்த்தது. இந்த தொட்டிலில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். பலா மரத்தில் செய்யப்பட்ட இந்த தொட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

சாந்தி, தடாகம் ரோடு

கொலு வைப்பதன் மூலம் வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வர முடியும். எங்கள் கொலுவில் அஷ்டலட்சுமி, நவவிநாயகர் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பொம்மைகளை இன்றும் பாதுகாத்து வருகிறோம்.

வரலட்சுமி, காந்தி பார்க்

எனது அம்மா கொடுத்த, 30 ஆண்டுகள் பழமையான பொம்மைகளை இன்றளவும் பாதுகாத்து கொலுவில் இடம் பெறச் செய்கிறோம். இந்தாண்டு முதல் முறையாக, 'அஸ்ட்ரோநெட்' ரோபோ ஒன்றையும் வைத்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை