உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குளத்துபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், குளத்துப்பாளையம் ஊராட்சியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாணவர்கள் முன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சுகாதாரம் குறித்து விளக்கமளித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிந்தாமணி மற்றும் மகேஸ்வரி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை