பல லட்சம் ரூபாயில் கட்டிய சுகாதார வளாகம் முடக்கம்
கோவில்பாளையம்; மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் அக்ரஹார சாமக்குளம் மக்கள் தவிக்கின்றனர். எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், அக்ரஹார சாமக்குளத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு சுகாதார வளாகத்தை சுற்றி வளர்ந்த புதர்கள், முள் செடிகளை அகற்றாததால் சுகாதாரம் வளாகம் முழுவதும் செடிகளால் சூழ்ந்து இருக்கிறது.சுகாதார வளாகத்துக்குள் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி பராமரிப்பு பணி செய்யாததால் மகளிர் சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் முடங்கி உள்ளது. 'அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.