உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெல்மெட் விழிப்புணர்வு

ஹெல்மெட் விழிப்புணர்வு

போத்தனூர்:சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பில், போத்தனூர் போக்குவரத்து போலீஸ் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.எஸ்.ஐ., செல்வகுமார் தலைமை வகித்து பேசுகையில், இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் இன்றி பயணிக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால், இழப்பீடு பெறமுடியாது. நமது வரவை எதிர்நோக்கி, குடும்பத்தார் காத்திருப்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து ஹெல்மெட் இன்றி வாகனத்தில் வந்த, 35 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஐ.,கள் அருள்துரை, நடராஜன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ