உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் மூலம் தமிழ்வழி படித்து பட்டம் பெறுவோர்: பணி ஒதுக்கீடு பெற வழிகாட்டியது உயர் நீதிமன்றம்

தபால் மூலம் தமிழ்வழி படித்து பட்டம் பெறுவோர்: பணி ஒதுக்கீடு பெற வழிகாட்டியது உயர் நீதிமன்றம்

மதுரை: 'தமிழக அரசு பணிகளில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை, தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்பு முடித்தோருக்கு வழங்கக் கூடாது' என கோரி மனு தாக்கல் செய்தவர்கள், தொழிலாளர் நல அமைப்பை அணுகி, தீர்வு பெறலாம் எனக் கூறி, மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மகேஸ்வரன், கோவிந்தசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதில், கல்லுாரிகளில் நேரடியாக தமிழ் வழியில் படித்தவர்களை மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு பெற அனுமதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. இவ்வாறு மனுவில் அவர் கள் குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இது, பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு; பொதுநல வழக்காக கருத முடியாது. சம்பந்தப்பட்ட அமைப்பை மனுதாரர்கள் அணுகி நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை