உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.7 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

ரூ.7 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

கோவை: விமானத்தில், ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவை கடத்திய, இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் 'ஸ்கூட்' நிறுவன விமானத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சுங்கத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. விமானத்தில் வந்த பயணியர், அவர்களது உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், இரு பயணியரின் உடைமைகளில், 6 கிலோ 'ஹைட்ரோபோனிக்ஸ்' கஞ்சா எனும், உயர் ரக கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ௭ கோடி ரூபாய். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பஹத்மான் முஜிப், 45, சுகைல் வாழமட்டத்தில் உபயதுல்லா, 40, எனத் தெரிந்தது. விற்பனைக்காக இந்த கஞ்சாவை அவர்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுபோல, அதிகாரிகள் சோதனையில், அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த, தமிழரசி, பாண்டித்துரை ஆகிய இரு பயணியர் 18.67 லட்சம் ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டிரோன் உதிரிப்பாகங்கள் கடத்தி வந்தது தெரிந்தது. அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !