உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஏஐ டெக்னாலஜியுடன் இடுப்பு மூட்டு சிகிச்சை

 ஏஐ டெக்னாலஜியுடன் இடுப்பு மூட்டு சிகிச்சை

கோவை: கோவையில் முதன்முறையாக, ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் ரோபோடிக் இடுப்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனை தலைவர் டாக்டர் ரெக்ஸ் கூறியதாவது: தொடர்ச்சியான இடுப்பு வலி, மூட்டு இறுக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஆகியவை அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தலாம். மருந்துகள் மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் பலனளிக்காத போது, சேதமடைந்த பந்து மற்றும் கிண்ண மூட்டை மாற்றியமைக்கும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. இச்சிகிச்சை பெரும்பாலும், இடுப்பு மூட்டு தேய்மானம் உள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படுகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சி. புதிய மூட்டை துல்லியமாக பொருத்துவதை ரோபோடிக் அமைப்பு உறுதி செய்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம். வலியும், நெருடலும் இன்றி ஆரோக்கியமாக நடக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ