உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விடுதி அருகே பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு

விடுதி அருகே பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு

பொள்ளாச்சி: ஆத்துப்பொள்ளாச்சி தனியார் விடுதி அருகே, 9 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துச்சென்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சி தனியார் தங்கும் விடுதியில், நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் மலைப்பாம்பு தென்பட்டது. இதைக்கண்ட மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்து, பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சென்றனர். வனத்துறையினர் கூறுகையில், ‘மலைப்பாம்பு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, விரைவாக சென்று யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாம்பு பிடிக்கப்பட்டது. இது ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ