உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து நகை திருட்டு: கோட்டூரில் மூவர் கைது 

வீடு புகுந்து நகை திருட்டு: கோட்டூரில் மூவர் கைது 

ஆனைமலை: ஆனைமலை அருகே, சோமந்துறை சித்துாரில் வீடு புகுந்து திருடிய நபர்களை, கோட்டூர் போலீசார் கைது செய்தனர். ஆனைமலை அருகே சோமந்துறை சித்துாரை சேர்ந்த தொழிலாளி சக்திவேல்,49. இவர், மனைவி பொள்ளாச்சியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த, 25ம் தேதி இவர்கள், வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம் போல வீட்டுக்கு வெளியே உள்ள டப்பாவில் வைத்து வேலைக்கு சென்றனர். வீடு திரும்பிய அவர்கள், பீரோவை திறந்த போது அதில் இருந்த, 16.5 பவுன் நகை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சக்திவேல் வீட்டின் அருகே கேரளாவை சேர்ந்த சாந்தகுமாரன்,47, கோவை கரையாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 42, திருப்பூர் மாவட்டம் கிழக்கு குமரலிங்கத்தை சேர்ந்த பாண்டித்துரை,27, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சக்திவேல் வீட்டின் சாவியை எடுத்து, பீரோவில் இருந்த நகையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, ஒன்பது பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை