மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்
01-Jan-2026
கோவை: தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) மற்றும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஆர்.டி.எப்.,) இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தின. இதில், தற்போதைய பருத்தி நிலவரம், இ.பி.எப்., புதிய திட்டங்கள், புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருத்தி வரத்து, விலை, தரம், கொள்முதலில் திட்டமிடல், குறைந்தபட்ச ஆதாரவிலை; இ.பி.எப்., தொடர்பான புதிய அறிவிப்புகள், திட்டங்கள், ஆன்லைன் செயல்முறைகள், நிறுவனங்கள், ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், அபராதம், வட்டியைத் தவிர்த்தல்; புதிய தொழிலாளர் சட்டங்களின் முக்கிய அம்சங்கள், நூல் தொழில்துறை மீதான அதன் தாக்கம், மனித வள கொள்கைகள், பதிவேடுகள், தொழிற்சாலை சட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சிஸ்பா தலைவர் அருண் கார்த்திக், துணைத் தலைவர்கள், பிரதீப், வெங்கடேசன், கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், ஆர்.டிஎப்., தலைவர் ஜெயபால், பி.எப்., கோவை மண்டல கமிஷனர் பிரசாந்த், தொழில்முனைவோர் பலர் பங்கேற்றனர்.
01-Jan-2026