மேலும் செய்திகள்
தீ தடுப்பு செயல்முறை
09-Aug-2025
வால்பாறை; வால்பாறையில் மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டுள்ளனர். வால்பாறையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், அரசு கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை பேரிடர் குறித்த செயல்விளக்கம் காண்பித்தனர். வால்பாறை தாசில்தார் குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: மழை அதிகமான நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இடர்பாடுகளை தடுக்கவும் பேரிடர் மீட்பு படையினர் வால்பாறையில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக, சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலாபயணியர் செல்லாதவாறு, பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்த ஆண்டு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இயற்கை சீற்றம் ஏற்படும் போது இயற்கையை வெறுக்க கூடாது. இயற்கையை மனிதன் நேசித்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். இவ்வாறு, பேசினார். தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டர்கள் ராம்பாபு, வீரேந்திரசிங் ஆகியோர் முன்னிலையில், மீட்பு படையினர் இயற்கை சீற்றத்தின் போது இடர்பாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என, மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர். நிகழ்ச்சியில், வனத்துறை ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
09-Aug-2025