மேலும் செய்திகள்
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
20-May-2025
ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு
23-May-2025
லக்னோ உள்ளே? வெளியே?
19-May-2025
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை) பிருந்தா, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 46,548 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இங்கு ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.இங்கு சீசன் இல்லாத நாட்களில், 3 முதல் 4 லாரிகளில் சுமார் 15 டன் அளவிற்கும், சீசன் நாட்களில் 40 முதல் 50 லாரிகளில் சுமார், 100 டன் வரையும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு தரம் வாரியாக, 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி, ஏலம் விடப்படுகின்றன.இதனிடையே, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை) பிருந்தா, நேற்று நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற உருளைக்கிழங்கு ஏல நடைமுறைகள் குறித்து பார்வையிட்டார்.பின், ஏலம் விட்டவுடன் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகை உடனடியாக வழங்கப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உருளைக்கிழங்குகள் தரம் பிரிப்பது குறித்து பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், துணைப்பதிவாளர் முத்துக்குமார், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன், மேலாளர் நிஸார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
20-May-2025
23-May-2025
19-May-2025