உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவி, குழந்தையை தாக்கிய கணவன் கைது

மனைவி, குழந்தையை தாக்கிய கணவன் கைது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் சக்திகார்த்திகேயன், 45, மனைவி சபரிநாயகி, 35. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து சபரிநாயகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், சபரிநாயகி, மகளுடன் அம்மா ஈஸ்வரி, 58, வீட்டில் கடந்த ஆறு மாதமாக கணவரைப் பிரிந்து வசிக்கிறார். இந்நிலையில், விவாகரத்து மனுவை வாபஸ் பெறுமாறு சக்திகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த கணவன் மரம் அறுக்கும் எந்திரத்தை எடுத்து மனைவி, மகள், மாமியாரை தாக்கி விட்டு தப்பினார். காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட் டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வால்பாறை அருகே உள்ள அட்டகட்டியில் பதுங்கி இருந்த சக்திகார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி