உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

அன்னுார்; மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார். அன்னுார் அருகே பூராண்டாம் பாளையத்தைச் சேர்ந்த சமீர், 36. மெக்கானிக். மனைவி யசோதா, 33. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சமீர் குடித்து விட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த ஆறு மாதமாக யசோதா தனியாக தனது தந்தை வீட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த சமீர் யசோதாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சமீரை கைது செய்து அன்னுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி