உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ பவுண்டேஷன் மருத்துவமனை புதிய கட்டட திறப்பு விழா

ஐ பவுண்டேஷன் மருத்துவமனை புதிய கட்டட திறப்பு விழா

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில், விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா, நேற்று நடந்தது.விழாவில், ஆரின் கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பை பேசுகையில், ''சிறிய விளக்கில் இருந்து வரும் ஒளி, அனைத்து இடங்களிலும் பரவுகிறது. நம் கண்களுக்குள் புகுந்து நரம்பு வழியாக உணரப்படுகிறது. இருளில் இருக்கும் போதுதான், கண்களின் அருமை தெரியும்,'' என்றார்.முன்னதாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் சித்ரா வரவேற்றார். புது கட்டடத்தின் சிறப்புகள் குறித்து, நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயஸ் விளக்கினார்.கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரன், கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் தலைவர் சீனிவாசன் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவமனையில், பல ஆண்டுகளாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை