மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
09-Nov-2025
கோவை: கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில் இலக்கிய சந்திப்பு கூட்டம், வைஷ்ணவா காம்பிளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார். இதில், கவிஞர் கோவை சசிகுமார், 'ஒரு கோப்பை இலக்கியம்' என்ற தலைப்பில் பேசியதாவது: முன்பு வீட்டில் ராமாயணம், மகாபாரதம் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் இருந்து நல்ல கதைகளை தாத்தா, பாட்டிகள் பேரக்குழந்தைகளுக்கு சொல்வது வழக்கம். இதன் வழியாகதான் புத்தகம் படிக்கும் பழக்கம், இலக்கிய ஆர்வம் பலருக்கு வந்தது. இன்றைக்கு வீட்டில் பத்திரிகை வாங்கி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பெரியவர்கள் பத்திரிக்கை படித்தால், குழந்தைகளும் படிப்பார்கள். குழந்தைகளிடம், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, பத்திரிகை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இலக்கிய ரசனையும் இதன் வாயிலாக வளரும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், புதிய நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கவிஞர் கடல் நாகராஜனுக்கு 'வசந்த தமிழ்மாமணி விருது' வழங்கப்பட்டது. கவிஞர்கள், சுந்தரராமன், பிரசாத், எழுத்தாளர் முகில் தினகரன், பேராசிரியர் அன்புசிவா, புலவர் தங்கவேல் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
09-Nov-2025