உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டவிரோதமாக மது விற்றவர் கைது-

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது-

சூலுார்; கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றபோது,ராமாட்சியம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு அருகில், பதுக்கி வைத்து சட்டவிரோதமாக மது விற்ற நபரை கையும், களவுமாக போலீசார் கைது செய்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம், 29 என்பது தெரிந்தது. அந்நபரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி