மேலும் செய்திகள்
'கொடை'யில் மரம் கடத்தல் வனத்துறையினர் உடந்தை
06-Jan-2026
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மா.கம்யூ. தாலுகா குழு உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் அரசியல் சமூக இயக்கத்தினர், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: போத்தமடை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன. அந்த மரங்களுடன் விலையுயர்ந்த வேறு மரங்களையும் வெட்டி கடத்துவதாக தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி வனச்சரக அலுவலரிடம் தொலைபேசியில் விதிமீறி மரங்கள் வெட்டப்படுவதாக கூறினோம். அதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி மரம் வெட்டுவதாக கூறினார். சிறிது நேரத்தில், ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், எங்களை தொடர்பு கொண்டார். நவமலை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
06-Jan-2026