ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றுங்க
சூலுார்; ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என, உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், சுல்தான்பேட்டையில் உழவர் தியாகிகள் தின மாநாடு மற்றும் கருத்தரங்கு நடந்தது. போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சி தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., கந்தசாமி, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், விவசாய அணி தலைவர் நாகராஜ், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மருத்துவ வசதியும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.