சூலூர் சட்டசபை தொகுதியில் ஓட்டு சாவடிகள் அதிகரிப்பு
சூலூர்: சூலூர் சட்டசபை தொகுதியில், 52 ஓட்டு சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. சூலூர் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் வெளியிட்டார். சூலூர் தொகுதி நோடல் அதிகாரி முருகேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், 1 லட்சத்து, 41 ஆயிரத்து, 306 ஆண்கள், 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 112 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 98 பேர் என, 2 லட்சத்து 93 ஆயிரத்து, 516 பேர் உள்ளனர். இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என, மொத்தம், 45 ஆயிரத்து, 311 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'சூலூர் தொகுதியில் ஏற்கனவே, 333 ஓட்டு சாவடிகள் இருந்தன. தற்போது, 52 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, 385 ஆக உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் ஜன., மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,' என்றனர்.