உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸில் பீட் எண்ணிக்கை அதிகரிப்பு

போலீஸில் பீட் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை; கோவை மாநகரில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு, மாநகரில் ரோந்து பணிகளில் ஈடுபட, 24 மணி நேர ரோந்து பணியை போலீசார் மேற்கொள்கின்றனர். இவர்கள் 'பீட்' போலீசார் என, அழைக்கப்படுகின்றனர். மாநகரில், 52 பீட்கள் இருந்தன. ஒரு பீட்டுக்கு இரு போலீசார் உள்ளனர். இதுதவிர, 20 'பேட்ரோல்கள்', இரு 'ஹைவே' பேட்ரோல்களும் செயல்பட்டு வந்தன. தற்போது கோவை சரவணம்பட்டி, துடியலுார், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லுார், சுந்தராபுரம், குனியமுத்துார் ஆகிய ஏழு போலீஸ் ஸ்டேஷன்களில், புதிதாக ஏழு பீட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பீட் போலீசாருக்கு ஏழு பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மாநகரில் பாதுகாப்பை மேம்படுத்த பீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 30 பீட்களில் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள, பீட் வாகனங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ்., மூலம், குறிப்பிட்ட பீட் போலீசார், இரவில் எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர் என்பது குறித்து தெரியும். எவ்வளவு நேரம் ரோந்து சென்றனர், குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு நேரம் இருந்தனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும். மறுநாள் காலை இத்தகவல், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், போலீசார் ஏதாவது ஒரு பகுதிக்கு செல்லாமல் இருந்தால் அதுகுறித்து கேள்வி எழுப்பப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை