மேலும் செய்திகள்
தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு
15-Jul-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) -500 ரூபாய்க்கு விற்பனையானது. காய்கறிகள் விலை கிலோவுக்கு; கத்தரி ரூ. 47, முருங்கை- 35, வெண்டை- 45, முள்ளங்கி - 25, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய்- 13, பாகற்காய்- 40, புடலை - 25, சுரைக்காய் - 35, பீர்க்கன் 35, பீட்ரூட் - 25, வெள்ளரி- 35, அவரை மற்றும் பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வியாபாரிகள் கூறுகையில், ' கடந்த வாரத்தைக் காட்டிலும் நேற்று சந்தையில் சில காய்கறிகள் வரத்து அதிகளவு இருந்தது. தக்காளி மட்டும், 700 பெட்டிகள் வரை கூடுதல் வரத்து இருந்தது. அதற்கேற்ப விலையும் சற்று உயர்ந்திருந்தது,' என்றனர்.
15-Jul-2025