மேலும் செய்திகள்
காட்டுக்குள் யானை இருக்கு ;விறகு தேட போகாதீங்க!
11-Sep-2025
வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா பயணியர் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் யானைகள் தனித்தனி கூட்டமாக ரோட்டில் முகாமிட்டு, வாகனங்களை வழிமறிக்கின்றன. மலைப்பாதையில் யானைகள் வழிமறிப்பதால், சுற்றுலா வருவோர் பீதியடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையிலிருந்து ஆழியாறு வரையில் யானைகள் நடமாட்டம் உள்ளது. மாலை நேரத்தில் மட்டுமே யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் மலைப்பாதையில் மிக கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும். எதிரே யானைகள் வந்தால் வாகனத்தை பின் நோக்கி நகர்த்தி அதற்கு வழிவிட வேண்டும். யானைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ, அருகில் செல்லவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி சுற்றுலா பயணியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.
11-Sep-2025