உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் ரவுண்டானாவில் இந்தியா கேட் அசத்தல்

உக்கடம் ரவுண்டானாவில் இந்தியா கேட் அசத்தல்

கோவை, ; கோவை நகர் பகுதியில் உள்ள சாலை சந்திப்புகள், தீவுத்திடல்கள் மற்றும் 'ரவுண்டானா'க்கள், மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்படுகிறது.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சுங்கம் திரும்பும் வளைவு பகுதியில், இன்னொரு 'ரவுண்டானா' அமைந்திருக்கிறது.அதன் மையப்பகுதியில், அசோக சக்கரத்துடன் கூடிய துாண் நிறுவப்பட்டிருக்கிறது. அதன் அருகாமையில் உள்ள இரு துாண்களில், திருவள்ளுவர், செங்கோட்டை, இந்தியா கேட், குதுாப்மினார் படங்கள் வரையப்படுகின்றன.ஆத்துப்பாலம் சந்திப்பில் உள்ள, 'ரவுண்டானா' துாண்களில் வேளாண் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட உள்ளன. பாரதி கலையகத்தை சேர்ந்த ஓவியர்கள், ஒவ்வொரு ஓவியத்தையும் தத்ரூபமாக, பார்ப்போரை கவரும் வகையில் வரைந்துவருகின்றனர். இதற்கான செலவை மாநகராட்சி ஏற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !