மேலும் செய்திகள்
All over List-லா இந்தியன் Players தான் Top
10-Jul-2025
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், சி.டி.சி.ஏ., ஜூனியர் கோல்ட்ஸ் அணியும் மோதின. இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 49.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து, 198 ரன் எடுத்தனர். வீரர் மனோபாலன், 77 ரன்னும், ஞானசேகர், 49 ரன்னும் எடுத்தனர். எதிரணி வீரர் ஹரிஹரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய சி.டி.சி.ஏ., ஜூனியர் கோல்ட்ஸ் அணியினர், 46.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து, 165 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் பரத் மூன்று விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
10-Jul-2025