மேலும் செய்திகள்
கருத்தரங்கு..
19-Dec-2024
பொள்ளாச்சி; தென்னை நார் தொழில்துறையில் புதுமை மற்றும் பல்வகைப்படுத்துவது அவசியம் என, கயிறு வாரியம் சார்பில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்கத்தின் கீழ் உள்ள கயிறு வாரியம் சார்பில், கருத்தரங்கம், தொழில்துறை சந்திப்பு கூட்டம் கோவையில் தனியார் ேஹாட்டலில் நடந்தது.தென்னை நார் வாரிய செயலாளர் அருண், தென்னை நார் தொழிலை ஊக்குவிப்பது மற்றும் வளர்ச்சி, புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி தொழிலை மேம்படுத்துவது குறித்து விளக்கினார்.இந்திய பொருளாதாரத்தில் தென்னை நார் தொழில்துறையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது.'டான் காயர்' சி.இ.ஓ., கண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, மூத்த கணக்கு அதிகாரி ரகுநந்தன், இணை இயக்குனர் டோட்கர் ஆகியோர் பங்கேற்றனர்.கயிறு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தென்னை நார் தொழிலின் தற்போதைய போக்குகள், சவால்கள், வளர்ச்சி மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக கருத்தரங்கம் நடத்தப்பட்டது. உலக சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க தென்னை நார் தொழில்துறையில் புதுமை மற்றும் பல்வகைப்படுத்தலின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.தொழில்துறை சந்திப்பு, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒருவொருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்காக ஒரு தளமாக இந்த கருத்தரங்கம் இருந்தது.இவ்வாறு, கூறினர்.கருத்தரங்கில், தென்னை நார் பொருட்கள் கண்காட்சி இடம் பெற்றது. இதில், பங்கேற்பார்கள் தங்களது சமீபத்திய தயாரிப்புகள், புதுமைகளை காட்சிப்படுத்தினர். தென்மாநிலத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
19-Dec-2024