உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டத்தில் உள்ளே --- வெளியே விளையாடியவர்கள் உள்ளே

தோட்டத்தில் உள்ளே --- வெளியே விளையாடியவர்கள் உள்ளே

போத்தனூர்; கோவை, நாச்சிபாளையம் அடுத்து மீனாட்சிபுரம், மாகாளியம்மன் கோவில் சாலையில் கணேஷ் தோட்டம் உள்ளது. இங்கு ரொக்கம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, மதுக்கரை போலீஸ் எஸ்.ஐ. செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.போலீசாருடன் அங்கு சென்ற எஸ்.ஐ., சூதாட்டத்தில் ஈடுபட்ட, 12 பேர் கும்பலை கைது செய்தார். 1.04 லட்சம் ரொக்கம், சீட்டு கட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தார். விசாரணையில், ரொக்கம் வைத்து உள்ளே -- வெளியே விளையாடியது, மீனாட்சிபுரம், ரமேஷ், 46, சிபிவாணன், 21, வழுக்குப்பாறை, வெள்ளிங்கிரி, 48, கணேசன், 41, கலையரசன், 29 சொக்கனூர், பார்த்திபன், 31, பாலத்துறை, பாஸ்கர், 45,. பிரவீண்குமார்,27, வழுக்குப்பாறை, கிருஷ்ணசாமி, 75, கிணத்துகடவு , கனகராஜ், 52, பாலக்காடு, ஜான் பாஷா, 29, வேல்முருகன் .45 என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி