உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணியர் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

பயணியர் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

நெகமம்; நெகமம், கள்ளிப்பட்டி ஊராட்சியில் பயணியர் நிழற்கூரை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். நெகமம், கள்ளிப்பட்டி பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இப்பகுதி மக்கள், கள்ளிப்பட்டி பிரிவில் இருந்து, நெகமம் மற்றும் பொள்ளாச்சிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்குள்ள, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை வசதி இல்லாததால், மழை, வெயிலில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. வயதானவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க, இங்கு விரைவில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !