உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 24 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்துக்கு ஆய்வு 

24 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்துக்கு ஆய்வு 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகளுக்கு உட்பட்ட, 24 அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், 'முதல்வரின் காலை உணவு திட்டம்' 2022 செப்., 15ல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டவர் பள்ளி, டி.இ.எல்.சி., மழலையர் எல்.எம்.எஸ்., பள்ளிகளில் திட்டம் செயல்படுத்துவது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்தார்.அதே போன்று, வால்பாறையில், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ராஜாராம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 13 பள்ளிகள், நகராட்சி எல்லை அருகே அமைந்துள்ள, எட்டு என மொத்தம், 21 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தற்போது அரசு உத்தரவின்படி, நகராட்சியில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, மூன்று பள்ளிகளில் பயிலும், 582 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.அதே போன்று, வால்பாறையில் உள்ள, 21 அரசு உதவி பெறும் பள்ளிகளில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், 411 மாணவர்கள் பயன்பெறுவர். மொத்தம், 24 பள்ளிகளில், 993 மாணவ, மாணவியர் பயனடைவர். இதற்கான ஆய்வுப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி