மேலும் செய்திகள்
முதியோருக்கு உதவிட 'சீனியர் சிட்டிசன் ஆப்'
21-Jun-2025
கோவை; மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை, செயலி வாயிலாக பெற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், மருத்துவ உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அரசின் சேவையை அரசு அலுவலகங்களுக்குச் சென்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் காரணமாக, அவர்களால் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கவோ அல்லது விண்ணப்பிக்கவோ முடிவதில்லை.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூத்த குடிமக்கள் நலன் கருதி மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, முதியோர் இல்லங்கள் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள், சட்ட சேவை ஆணையம், மருத்துவமனை விபரம், மூத்த குடிமக்களுக்கான ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விபரங்களை அறியலாம். தங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். 'ப்ளே ஸ்டோர்' வாயிலாக, இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21-Jun-2025