உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க அறிவுறுத்தல்

சொத்து வரி விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க அறிவுறுத்தல்

கோவை : சொத்து வரி விதிப்பு விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, விண்ணப்பதாரர்களுக்கு புத்தகங்கள் வழங்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில், தற்போதைய நிலவரப்படி, ஐந்து லட்சத்து, 92 ஆயிரத்து, 314 வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பதற்கேற்ப, இந்த எண்ணிக்கை மாறுபடும். நடப்பு நிதியாண்டில் (2025-26) 510.91 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, 116.95 கோடி வசூலாகியுள்ளது.வரி வசூலர்களின் செயல்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் நடந்தது. புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயிக்கக் கோரி, 1,200 விண்ணப்பங்கள் வந்திருப்பது தெரிய வந்தது. அவற்றை விரைந்து பரிசீலித்து, சொத்து வரி நிர்ணயித்து, புத்தகம் போட்டு, கேட்பு நோட்டீஸ் வழங்க வேண்டு மென, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.நடப்பு நிதியாண்டில், புதிய சொத்து வரியாக, 24 கோடி ரூபாய் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப வரி வசூலர்கள் பணிபுரிய வேண்டும். வரி வசூலர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறன் மேம்பாட்டால் மட்டுமே பணிச்சுமை வந்தாலும் திறம்பட சமாளிக்க முடியுமென, கமிஷனர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !