உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணி தீவிரம்

வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணி தீவிரம்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பெயர், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு, வீடாக சென்று சேகரித்து, இதற்காக வழங்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்து வருகின்றனர். மேலும், 18 வயது நிறைவடைந்த வாக்காளர் விபரங்களை பதிவு செய்கின்றனர். வரைவு பட்டியல் வெளியிட்ட பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் அக்., 29ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குகின்றன.இது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், மாநிலத்துக்குள் இரட்டை பதிவுகளை நீக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக, பெயர், தந்தை பெயர், வசிப்பிடம், பிறந்த தேதி, வயது ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு கம்ப்யூட்டர் வாயிலாக ஒத்துப் போகும் வாக்காளர்களின் விபரங்கள் எடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒருவர் பெயர் இரு வேறு இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்புடைய வாக்காளருக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் விரும்பும் இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் வகையில் சேர்க்கப்படும். மற்றொரு இடத்தில் நீக்கப்படும். வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் உடனடியாக நீக்கப்பட மாட்டாது. தொடர்புடைய வாக்காளருக்கு முதலில் கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்துக்கு, 15 நாட்களுக்குள் பதில் வராத பட்சத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கள ஆய்வுக்கு பின்னர், வாக்காளர் அனுமதி பெற்று பெயர் நீக்கம் செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை