உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிலிம் மேக்கிங்கில் சர்வதேச டிப்ளமோ

பிலிம் மேக்கிங்கில் சர்வதேச டிப்ளமோ

கோவை; ஜே.டி., எஜூகேஷன் மற்றும் டிரைனிங்நிறுவனம் தற்போது, பிரான்சின் புகழ்பெற்ற டிபிஐம்ஏ பாரிஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் வாயிலாக, டிஜிட்டல் பிலிம்மேக்கிங் மற்றும் வி.எப்.எக்ஸ்., எனும் புதிய சர்வதேச டிப்ளமோ பயிற்சியை துவக்கியுள்ளது.இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களின் மூத்த வி.எப்.எக்ஸ்., மேற்பார்வையாளர் பீட் டிராப்பர், புதிய பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்த ஒரு வருட தொழில்முனைவு டிப்ளமாவில், எட்டு மாதங்கள் இந்தியாவிலும், 2026 பிப்.,ல்ஒரு மாதம் பாரிசிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சியில் இணைய,குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆக.,மாதம் தொடங்கும் பயிற்சிக்கான விண்ணப்பம், ஜூலை 15ம் தேதியோடு முடிவடைகிறது. நேரலையில், டிபிஐம்ஏ இயக்குனர்ஜான் பால் சுவாமிநாதன் மற்றும் குழுவினர் பங்கேற்றனர். டி.என்.இ.ஜி., நிறுவனத்தின் வி.எப்.எக்ஸ்., துறைத் தலைவர் கார்த்திகேயன், அகாடெமி ஆப் மீடியா அண்ட் டிசைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் தாமஸ், டிபிஐம்ஏ இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி ஜேசுராஜா, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின்நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலாளர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை