தொழிற்பயிற்சியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
வால்பாறை; வால்பாறையில் கடந்த, 2021ம் ஆண்டு முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை நேற்று 19ம் தேதி துவங்குகிறது.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல், 40 வயது வரை உள்ளவர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்பிடிற்கான விண்ணப்பங்களை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் சேர்ந்த பின், மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படும். இது தவிர, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ், விலையில்லா மடிக்கணிணி, சைக்கிள் போன்றவை வழங்கபடுகின்றன. இத்தகவலை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.