உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் டெண்டர் விடுவதில் உள்நோக்கமா? ஒப்பந்ததாரர்கள் சந்தேகம்

ஊராட்சிகளில் டெண்டர் விடுவதில் உள்நோக்கமா? ஒப்பந்ததாரர்கள் சந்தேகம்

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சிகளில் பணிகள் செய்ய, இரண்டு முறை டெண்டர் தேதி தள்ளி வைக்கப்பட்டது.இதில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளதா என ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு, ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், இரும்பறை, இலுப்பநத்தம், மருதூர், வெள்ளியங்காடு, நெல்லித்துறை ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு, தலா 60 லட்சம் ரூபாய் வீதம், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் கான்கிரீட் சாலைகள், அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறுபணிகள் செய்யப்படஉள்ளன.இந்த பணிகளுக்கு கடந்த மாதம் 28ம் தேதி காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின், சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்களில் பலர், ஆன்லைன் வாயிலாக பதிவு டெண்டர் கோரினர்.29ம் தேதி டெண்டர் படிவங்கள் திறந்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது. ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின்சார்பில், சில நிர்வாக காரணங்களால் டெண்டர் இம்மாதம் ஏழாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று காலையில் இருந்து ஒப்பந்ததாரர்கள் டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியிடம் கொடுத்தனர்.ஆனால் நேற்று ஆன்லைன் சரியாக வேலை செய்யாததால், டெண்டர் வருகிற, 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக ஒன்றிய அலுவலகத்தில் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.இதை பார்த்த ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிகள் ஒதுக்கீடு செய்வதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை