உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இது திட்டமிட்ட கொலையா... தற்கொலையா?

இது திட்டமிட்ட கொலையா... தற்கொலையா?

கோவை: ஜாக் அவரது அலுவலக அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலைக் கண்ட போலீசார், அங்கு இருந்த துப்பாக்கி, அறை உள்பக்கமாகப் பூட்டி இருந்ததை வைத்து இது தற்கொலை என முடிவு செய்தனர். ஆனால், அவரது மனைவி மறுத்தார். தனது கணவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும், அவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகித்தார். மனைவியின் சந்தேகத்தால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கி, தடயங்களை ஆராய்ந்து உங்களால் உண்மையைக் கண்டறிய முடியுமா? இதுவரை ஹாலிவுட் படம், வெப் சீரிஸில் பார்த்த கிரைம் கேஸ்களை இப்போது நீங்களும் சால்வ் செய்யலாம், எஸ்கேப் ரூம் எனப்படும் புதிர் அறை விளையாட்டு வாயிலாக. இந்த விளையாட்டில், ஒரு குறிப்பிட்ட கேஸ்களில் அமைக்கப்பட்ட அறைக்குள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் செல்ல வேண்டும். அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள குறிப்புகள், ரகசிய எண்கள், புதிர்கள், தடயங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி கேஸை முடிக்க வேண்டும். சில இடங்களில் சிறைச்சாலை, மர்மக் கொலை, திருட்டு சம்பவம், கடத்தல் போன்ற கதைக்களங்களின் அடிப்படையிலும் விளையாட்டுகள் அமைக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அனைத்து புதிர்களையும் விடுவித்து அறையிலிருந்து வெளியேறுவதே வெற்றி. இந்த விளையாட்டு கிரைம் ஸ்டோரி, கிரைம் சால்விங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும். குழந்தைகளுக்கு இது வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, சிந்திக்கும் திறன், குழுவாகச் செயல்படும் தன்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்கும். கோவையில் ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எஸ்கேப் ரூம்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை